Thursday, March 17, 2011

ஜெ.க்கு தோனி... கருணாநிதிக்கு அஃப்ரிதி!!! (கற்பனை)


 நன்றி விகடன் 
 
ஜெ.க்கு தோனி... கருணாநிதிக்கு அஃப்ரிதி!!!  - கற்பனை  

 

தேர்தல் பரபரப்புக்கு இடையே உலக கோப்பை கிரிக்கெட்டை கண்காணிக்கத் தவறவில்லை நமது தலைவர்கள்.

கிரிக்கெட் ஆர்வம் கொண்ட நமது தலைவர்கள் சிலருக்கு தற்போதையச் சூழலில் பிடித்த பிளேயர்கள் யார் எனக் கேட்ட போது வந்த பதில்கள்...

கருணாநிதி : தம்பி அஃப்ரிதி தான் எனக்குப் பிடிக்கும். சிதறிக் கிடந்த அணியை அற்புதமாக ஒன்று சேர்த்து வழிநடத்திச் சென்று அசத்தி வருகிறார். கம்ரான் அக்மல் போன்றவர்களின் 'கை'களில் இருந்து கேட்சுகள் நழுவினாலும் கூட, மீண்டும் புத்துயிர் பெற்று இறுதிக்கு முன்னேற அப்ரிதி வழிவகுப்பார் என்று நம்புகிறேன். ஒரே குறை... மேட்ச் பிக்ஸிங் போன்ற குற்றத்துக்காக அணியின் முக்கிய வீரர்களாக திகழ வேண்டியவர்கள் குற்றவாளிகளாக வெளியேற்றப்பட்டிருப்பது தான்!

ஜெயலலிதா : இந்திய கேப்டன் தோனிக்கே எனது ஆதரவு. அற்புதமாக அமைந்திருக்கிறது அணி. ஒன்றுபட்டு செயல்பட்டு வெற்றியைத் தட்டிப் பறிப்பது உறுதி. பவுலிங் தான் வீக் என்கிறார்கள். கவலையில்லை. எதிரணியின் பேட்டிங்கை கட்டுப்படுத்த அலையலையாய் சுழற்கின்ற பந்தை லாவகமாக வீசினாலே போதுமானது. 

ராமதாஸ் : சச்சின் டெண்டுல்கர். காரணம், பல ஆண்டுகளாக உலக கோப்பையை இந்தியாவுக்கு வென்று தர ஆடி வருபவர். இந்த 2011 உலக கோப்பை இல்லை என்றாலும் பரவாயில்லை... 2015-ல் நடக்கும் உலக கோப்பையை நிச்சயம் அவர் இந்தியாவுக்கு பெற்று தருவார் என்பது உறுதி!

வைகோ : சுரேஷ் ராய்னா. அற்புதமான உறுதுணை ஆட்டக்காரர். ஐபிஎல் போன்ற போட்டிகளில் தேவைப்பட்ட போதெல்லாம் அவரை தோனி பயன்படுத்திக் கொண்டார். ஆனால், முக்கியமான உலக கோப்பை போட்டியில் அவருக்கு உரிய இடம் கிடைக்காமல் இருந்து வருவது வருத்தத்துக்குரியது.

விஜயகாந்த் : விராட் கோஹ்லி. இந்தியாவின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தி. இறங்குவது ஒன்'டவுண்' என்றாலும், அற்புதமான ஆட்டத்தால் அணியில் வெற்றிக்கு வித்திடுபவர். இப்போது குறித்து வைத்துக் கொள்ளுங்கள், அடுத்த இந்திய கேப்டன் அவர் தான்!

திருமாவளவன் : தம்பி ஸ்ரீசாந்த்து தான். உணர்வாளர். இதைத் தவிர இப்போதைக்கு எதுவும் சொல்ல விரும்பவில்லை.

பெஸ்ட் ராமசாமி : கேவின் ஓ பிரெயன். எங்கிருந்தோ வந்த அயர்லாந்து வீரர் அசால்டாக குறைந்த பந்துகளில் சதமடித்து சாதனைச் செய்து, யார்ரா இவன்னு பாக்க வெச்சவர்!

பொன்.ராதாகிருஷ்ணன் : கென்ய வீரர் ஹெச்.ஒசிண்டே. காரணம் கேக்குறீங்களா? முதல்ல அவரோட வாழ்க்கை வரலாற்றைப் படிச்சு தெரிஞ்சுக்கோங்க.

கே.வி.தங்கபாலு: இலங்கை வீரர் சங்ககாரா. ஏன்னா அவரோட அணுகுமுறை அன்னைக்கு ரொம்ப புடிக்கும்.

கார்த்திக் : பார்லிமென்டேரியன் பீப்பிள் பார்ட்டிக்கு ரொம்ப புடிச்ச வீரர்னா அது இந்திய வீரர் லியாண்டர் பயஸ் தான். என்னெ? அவர் டீம்ல இல்லியா? என்ன நடக்குது இங்க... இந்த கிரிக்கெட்டே ஒன்னும் புரில.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்: கங்குலி. டீம்ல சேக்காட்டினாலும் பரவாயில்லை. அணியின் ஐவர் தேர்வுக் குழுவுலயாவது சேத்திருக்க வேண்டும். அது அவருக்கு மிகப் பெரிய அவமதிப்பு. ஒரே லாபம்... அவருக்கு 'சுதந்திரம்' கிடைத்தது.

சீமான் : முத்தையா முரளிதரன். சிங்களக்காரங்க மத்தியில சிங்கிளா நிக்கிற தமிழேண்டா!


No comments:

Post a Comment