Sunday, October 2, 2011

வெடி

காதலில் விழுந்தேன் படத்தைப் பார்த்தபிறகு இனி சன் பிச்சர்ஸ் படமே பார்க்ககூடாது முடிவு செய்திருந்தேன். ஆனாலும் சில சமயம் என் கேட்ட நேரம், எப்படியாவது பார்க்க வைத்துவிடும். மங்காத்தா தவிர வேறு எந்த சன் பிச்சர்ஸ் படத்தையும் என்ஜாய் பண்ணதாக நினைவில்லை(அதுவும் அஜீத்துக்காக மட்டும்தான்). இம்முறை என் கேட்ட நேரம், நண்பர் பாலபிரசாந்த் மூலமாக வந்தது. எவ்வளவோ சொல்லியும், எஸ்கேப்ல படம் பாக்கலாம்னு கூட்டிட்டு போயிட்டார். எஸ்கேப்ல ஞாயிறு அன்லிமிடெட் பிரியாணி கிடைக்கும்னு நண்பர் பரமேஷ் சொன்னதாலும் ஒகே சொல்லிட்டேன்.
தியேட்டர் செல்லும் வழியில் பைக்கில் வழக்கம் போல பாலா அபசகுனமாகவே பேசிக்கொண்டு வந்தார். அதையெல்லாம் பொறுத்து, சகிச்சுக்கிட்டு தியேட்டர் வந்து படத்த பாத்தா..... இந்த படத்துக்கு அந்தாளு பேச்சே தேவல


தமிழ், தெலுங்கு சினிமாக்கள் மறந்துவிட்ட பல 'க்ளிஷே'க்கள் படத்தில் உண்டு.

இந்தப் படம் பார்த்தபின் தான் புரிகிறது, அந்த மொன்ன கௌதம் படங்களையெல்லாம் சிலர் ஏன் கொண்டாடுகிறார்கள் என்று. இந்த படத்துக்கு மிஷ்கின், விஜய், கௌதம் போன்றோரின் Ctrl+C, Ctrl+V படங்கள் எவ்வளவோ மேல்.


இந்த மொக்க படத்துக்கு என்னை கூட்டிக்கிட்டு போன அந்த பாலா இவர்தான்.



காலையில படம் பாத்துட்டு, கொஞ்சம் சுத்திட்டு இரவு வீடு திரும்பும்போது "பிரபு தேவா தான் டைரக்டர்னு முன்னாடியே சொல்லியிருந்தா படத்துக்கே வந்துருக்கமாட்டேன். ஏன் சொல்லல"னு என்னைய பாத்து கேட்டாரு பாருங்க...

No comments:

Post a Comment